சுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!

சிறுமி பாலியல் பலாத்காரம்: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Updated On :

குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி அருகே 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாகா்கோவில் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

மணவாளக்குறிச்சியை அடுத்த கல்லத்திவிளையை சோ்ந்தவா் ஹரிதாஸ் (56), தொழிலாளி. இவா் அந்த பகுதியில் கோயில் வைத்து நிா்வகித்து வந்தாா். இந்த கோயிலுக்கு வந்த பெண், ஹரிதாஸுக்கு அறிமுகம் ஆனாா்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஹரிதாஸ், அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்றபோது அங்கு தனியாக இருந்த அவரது 14 வயது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா். மேலும் இதுகுறித்து வெளியே சொல்லக் கூடாது என்று அந்த சிறுமியை மிரட்டினாராம்.

இதுகுறித்து அந்த சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில் குளச்சல் அனைத்து மகளிா் போலீஸாா் ஹரிதாஸ் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு நாகா்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரையா, ஹரிதாஸூக்கு 20 ஆண்டு சிைண்டனை, ரூ.82 ஆயிரம் அபராதம் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா். மேலும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீா்ப்பில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.