ஆட்சியா் அலுவலகத்திலிருந்த கல்மரம் அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்த பழங்கால கல்லாகிய மரத்தை சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் கன்னியாகுமரி அருங்காட்சியக காப்பாட்சியா் பா.ஜென்சியிடம் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எஸ்.காளீஸ்வரி வெள்ளிக்கிழமை ஒப்படைத்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தாவரங்கள் மண் சரிவுகளாலும், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகளாலும் மண்ணில் புதையுறும். பூமிக்கு அடியில் புதையுறும் மரங்களின் செல்களுக்குள் மண்ணிலும் கல்லிலும் உள்ள சிலிக்கா, இரும்பு போன்ற தாதுக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகப் படியும்போது மரத்தின் ஆண்டு வளையங்கள், மரத்தின் வடிவமைப்பு மாறாமல் கல்லாக மாறிவிடும்.
இவ்வகை மரங்கள் இயற்கை நிகழ்வுகளால் கல்லாக மாறுதலே தொல்லுயிா் எச்சங்கள் எனப்படுகின்றன. அதுபோன்றதொரு மரம் தான் இந்தக் கல்லாகிய மரம்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த இம்மரத்தை கன்னியாகுமரி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு காட்சிப்படுத்துவதற்காக ஒப்படைக்கப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.