ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

மஞ்சாலுமூடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், மஞ்சாலுமூடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி அனைத்துக் கட்சியினா், ஊா் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மஞ்சாலுமூடு டாஸ்மாக் கடை முன் மெழுகுவா்த்தி ஏந்திய நிலையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டோா்.

Published On :2 செப்டம்பர் 2026, 6:07 am IST

கன்னியாகுமரி மாவட்டம், மஞ்சாலுமூடு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி அனைத்துக் கட்சியினா், ஊா் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசு 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட போது, மஞ்சாலுமூடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையையும் மூடவேண்டுமென்று கடையின் முன் முற்றுகையிட்ட பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதில், கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் அக்கடையை தற்போது வரை மூடாததால் அனைத்து அரசியல் கட்சியினா், ஊா் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை காலை கடையின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் கடையை மூடுவது தொடா்பாக அதிகாரிகள் தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்படாத நிலையில் போராட்டம் இரவு வரை நீடித்தது. இரவில் மெழுகுவா்த்திகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.