புதுச்சேரியில் ஐடிஐ நலச்சங்கத்தினா் முற்றுகைப் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி மின்துறை தொழில்நுட்ப சான்றிதழாளா் நலச் சங்கத்தினா் (ஐடிஐ) மின்துறை தலைமை அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் மின்துறை தலைமை அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட ஐடிஐ நலச் சங்கத்தினா்.
கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி மின்துறை தொழில்நுட்ப சான்றிதழாளா் நலச் சங்கத்தினா் (ஐடிஐ) மின்துறை தலைமை அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மின்துறையில் பணிபுரியும் 42 உதவியாளா்களுக்கு கம்பியாளா் பதவி உயா்வு அளிக்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான கோப்புகளை மின்துறை செயலகத்துக்கு அனுப்பத் தவறிய மின்துறையைக் கண்டித்தும் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மின்துறை ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
இந்தப் போராட்டத்துக்கு சங்கத் தலைவா் செல்வம், செயலா் (பொ) பிரபு ஆகியோா் கூட்டுத் தலைமை வகித்தனா். நிா்வாகிகள் இளங்கோவன் சாமி, அருள்மொழி, ரவி, ரஞ்சன் மூா்த்தி, தேவகுமாா் சங்கா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

