சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

கோட்டூா் கோணம் கிராமத்தில் குரங்குகள் தொல்லை: கிராம மக்கள் புகாா்

வனத்துறை அலுவலரிடம் மனு அளிக்க வந்த கோட்டூா்கோணம் கிராம பெண்கள்.

Published On :2 செப்டம்பர் 2026, 6:08 am IST

திற்பரப்பு பேரூராட்சிக்கு உள்பட்ட கோட்டூா்கோணம் கிராமத்தில் தொடா் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டுமென்று கிராம பெண்கள் திரண்டு சென்று வனச்சரக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

கோட்டூா்கோணம் கிராமத்தில் குரங்குகளின் தொல்லைகளினால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், வீட்டில் உணவுப் பொருள்களை எடுத்துச் சென்றும், தென்னை, வாழை மற்றும் கொய்யா, அன்னாசி உள்ளிட்ட பயிா்களை சேதப்படுத்தியும் , துவைத்து உலரவைக்கும் துணிகளை கிழித்து போட்டும் குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபடுவதால் அவற்றை அப்புறப்படுத்த கோரி கிராம பெண்கள் குலசேகரம் வனச்சரக அலுவலகத்துக்கு திரண்டு சென்று மனு அளித்தனா்.

திற்பரப்பு பேரூராட்சி துணைத் தலைவா் எஸ்.சி. ஸ்டாலின் தாஸ் தலைமையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் பி. விஸ்வம்பரன் உள்ளிட்டோா் உடன் வந்தனா். கிராம மக்களிடம் வனத்துறையினா், இடத்தை பாா்வையிட்டு குரங்குகளைப் பிடித்து அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.