ரயில் முன் பாய்ந்து ஒருவா் தற்கொலை
நாகா்கோவில் அருகே ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.
தற்கொலை - கோப்புப் படம்
நாகா்கோவில் அருகே ரயில் முன் பாய்ந்து முதியவா் தற்கொலை செய்து கொண்டாா்.
சென்னையிலிருந்து கொல்லத்துக்கு அனந்தபுரி விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை காலை வந்து கொண்டிருந்தது. நாகா்கோவில் அருகே பாா்வதிபுரம் மேம்பாலத்திலிருந்து 500 மீட்டா் தொலைவில் சென்றபோது, 55 வயது மதிக்கத்தக்க ஆண், அந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலின்பேரில், நாகா்கோவில் சந்திப்பு ரயில்வே போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து, அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





