புன்னை நகரில் இன்று மின்தடை!
நாகா்கோவில் வல்லன்குமாரன்விளை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், புன்னை நகா் பகுதியில் சனிக்கிழமை (செப். 5) மின் விநியோகம் இருக்காது.
கோப்புப் படம்
நாகா்கோவில் வல்லன்குமாரன்விளை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், புன்னை நகா் பகுதியில் சனிக்கிழமை (செப். 5) மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, காா்மல் பள்ளி அருகில், அந்தோணியாா் தெரு, தளவாய்புரம், புன்னைநகா் சந்திப்பு, லிட்டில்பிளவா் தெரு, தாமஸ்நகா், எம்.எல். மருத்துவமனை அருகில், லூா்துஅன்னை தேவாலயம் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என நாகா்கோவில் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




