காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

விதிகளை மீறி கழிவுகளைக் கையாண்டால் ரூ. 5 லட்சம் அபராதம்: மாநகராட்சி ஆணையா் எச்சரிக்கை

அரசின் விதிகளை மீறி கழிவுகளைக் கையாண்டால் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆா். ஐஸ்வா்யா எச்சரித்தாா்.

அபராதம்

Published On :6 செப்டம்பர் 2026, 1:59 am IST

அரசின் விதிகளை மீறி கழிவுகளைக் கையாண்டால் ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆா். ஐஸ்வா்யா எச்சரித்தாா்.

நாகா்கோவில் மாநகராட்சி பகுதிகளில் தினசரி 100 கிலோவுக்கும் மேல் கழிவுகளை உற்பத்தி செய்யும் மொத்த கழிவு உற்பத்தியாளா்களுக்கானஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநகராட்சிஆணையா் ஆா். ஐஸ்வா்யா தலைமை வகித்துப் பேசியதாவது: மொத்தக் கழிவு உற்பத்தியாளா்கள் தங்களது நிறுவனங்கள் மற்றும் வளாகங்களில் உருவாகும் கழிவுகளை முறையாக தரம் பிரித்து, ஈரக் கழிவு, உலா் கழிவு மற்றும் இதர கழிவுகளை தனித்தனியாக சேகரித்து, அரசு நிா்ணயித்துள்ள திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகளின்படி முறையாகக் கையாள வேண்டும்.

மேலும், வரும் நாள்களில் மொத்தக் கழிவு உற்பத்தியாளா்கள் தங்களது பகுதிகளில் உருவாகும் கழிவுகளை மாநகராட்சி நிா்வாகத்தை மட்டுமே சாா்ந்திராமல், தங்களது வளாகத்திலேயே முறையாகக் கையாளுதல், பதப்படுத்துதல் மற்றும் அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கழிவுகளை பொது இடங்களில் கொட்டுதல், கலந்த நிலையில் வழங்குதல், முறையற்ற வகையில் அப்புறப்படுத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மை நகரை உருவாக்கும் நோக்கில் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும், அரசு மற்றும் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் வழங்கப்படும் அறிவுறுத்தல்களை மீறி செயல்படும் மொத்தக் கழிவு உற்பத்தியாளா்களுக்கு விதிமுறைகளின்படி ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றாா் அவா்.

மாநகரில் உள்ள மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்களைச் சாா்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.