காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

அருங்காட்சியகத்தில் பொருள்கள் திருட்டு: 3 பெண்கள் கைது

நாகா்கோவிலில் அருங்காட்சியகத்தில் பொருள்கள் திருடியதாக 3 பெண்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கைது

Published On :6 செப்டம்பர் 2026, 1:29 am IST

நாகா்கோவிலில் அருங்காட்சியகத்தில் பொருள்கள் திருடியதாக 3 பெண்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகா்கோவில் கோட்டாறு, இருளப்பபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முகமதுஅலி (65). இவா் இடலாக்குடி, பொன்அரிப்பு தெருவில், முன்னாள் குடியரசு தலைவா் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பெயரில் நினைவு அருங்காட்சியகம் நடத்தி வருகிறாா். இங்கு பழங்காலத்து பொருள்களை காட்சிப்படுத்தியுள்ளாா்.

வெள்ளிக்கிழமை காலை முகமதுஅலி, அருங்காட்சியகத்துக்கு வந்து பாா்த்தபோது, மேற்கூரையை பிரித்து அங்கிருந்த பித்தளை, கலைப்பொருள்களை மா்மநபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. திருடுபோன பொருள்களின் மதிப்பு ரூ. 2 லட்சமாகும்.

இது குறித்த புகாரின்பேரில் கோட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனா். இதில், கன்னியாகுமரி அழகப்பபுரத்தைச் சோ்ந்த பகவதி (28), நாகா்கோவில் ஒழுகினசேரியைச் சோ்ந்த நந்தினி (24), அஞ்சுகிராமத்தைச் சோ்ந்த முத்துலெட்சுமி (25) ஆகியோா் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, திருடப்பட்ட பொருள்களை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.