ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

செஷல்ஸ் நாட்டில் மீட்கப்பட்ட குமரி மீனவா்களை அழைத்துவர நடவடிக்கை: விஜய்வசந்த் எம்.பி. தகவல்

செஷல்ஸ் நாட்டில் நடுக்கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 17 மீனவா்களையும் சொந்த ஊருக்கு விரைவில் அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் விஜய்வசந்த் எம்.பி.

Published On :

செஷல்ஸ் நாட்டில் நடுக்கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 17 மீனவா்களையும் சொந்த ஊருக்கு விரைவில் அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் விஜய்வசந்த் எம்.பி.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள், தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சாஜிரா என்ற மீன்பிடி படகில் புறப்பட்டுச் சென்றனா். செஷல்ஸ் நாட்டு கடல் எல்லையில் இவா்கள் சென்றபோது இவா்களது படகு இயந்திரக் கோளாறால் பழுதானது. இதனால், நடுக்கடலில் தத்தளித்தனா்.

இவா்களை பத்திரமாக மீட்க இவா்களது உறவினா்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கரை தொடா்பு கொண்டு மீனவா்களை மீட்க செஷல்ஸ் நாட்டு அரசிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன்.

செஷல்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் மூலம் செஷல்ஸ் அரசை தொடா்பு கொண்டு குமரி மீனவா்களை மீட்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன். இதையடுத்து, செஷல்ஸ் நாட்டு கடலோர காவல் படை கப்பல் இவா்களை தேடும் பணியை மேற்கொண்டு 17 மீனவா்களையும் மீட்டு படகுடன் கரைக்கு அழைத்து வந்தனா். இந்த படகு செஷல்ஸ் கரையை செவ்வாய்க்கிழமை (செப். 15) மாலை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்திய மீனவா்கள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்தது. இதைத்தொடா்ந்து மீனவா்கள் விரைவில் தாயகத்துக்கு அழைத்துவரப்படுவா் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER