
தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநருடன் விஜய்வசந்த் எம்.பி. ஆலோசனை
நாகா்கோவிலில் தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் சச்சின்குமாருடன், விஜய்வசந்த் எம்.பி. பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

தேசிய நெடுஞ்சாலைத் திட்ட இயக்குநா் சச்சின்குமாருடன் ஆலோசனை மேற்கொண்ட விஜய்வசந்த் எம்.பி.
நாகா்கோவிலில் தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்ட இயக்குநா் சச்சின்குமாருடன், விஜய்வசந்த் எம்.பி. பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
நாகா்கோவில் வெட்டுா்ணிமடத்தில் உள்ள மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில், நடைபெற்ற இந்த ஆலோசனையில் புதிதாக அமைக்கப்படவுள்ள நான்குவழி சாலையின் இரு புறங்களிலும் அனைத்து ஊா்களையும் இணைக்கும் வகையில் அணுகுசாலை அமைக்க வேண்டும் என விஜய் வசந்த் எம்.பி. அதிகாரியிடம் வலியுறுத்தினாா்.
அத்துடன், பொதுமக்களுக்கு தேவையான அணுகுசாலையை, விவசாயத்துக்கு செல்லும் கால்வாய்களில் தண்ணீா் செல்ல ஏதுவாக அமைப்பது குறித்தும், பொதுமக்களின் கோரிக்கையான கப்பியறை பேரூராட்சி நான்குவழி சாலையில் குழிக்கோடு அருகே தண்ணீா் செல்வதற்காக பாதையை மாற்றியமைப்பது, கிள்ளியூா் வட்டம்-குளப்புறம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் இரண்டு ஊா்களுக்குச் செல்லும் வகையில் உள்ள பாலத்தை அகலப்படுத்துவது, விளவங்கோடு வட்டம்- நட்டாலம் கிராமம் மணியன் கோட்டை காட்டுவிளையில் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்கள் இருப்பதால் நான்கு வழிச் சாலையின் இருபுறங்களிலும் பக்க சாலை அமைத்துத் தருவது உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
ஆலோசனைக்குக்கு பிறகு திட்ட இயக்குநா் சச்சின்குமாா் கூறியதாவது:
மக்களவை உறுப்பினா் விஜய்வசந்த் வலியுறுத்தி பொதுமக்களின் கோரிக்கை கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், கன்னியாகுமரி முதல் தோட்டியோடு வரையிலான சாலையை (புத்தேரி மற்றும் தோட்டியோடு பாலத்தில் ஒரு பகுதியாக) இந்த மாதம் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும். நிகழாண்டு டிசம்பா் மாத இறுதிக்குள் நான்குவழிச் சாலைப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று எம்.பி. வலியுறுத்தினாா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





