தில்லியில் இந்தியா கூட்டணிக் கூட்டம் தொடங்கியது! 19 கட்சிகள் பங்கேற்பு!துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையரில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு!முதல்வா் விஜய் வருகையால் கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஇரு நாள்களில் 5,000 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்புற்றுநோய் மருந்துகளை 10 மடங்கு அதிக விலைக்கு விற்பது படுகொலைக்குச் சமம்: உச்சநீதிமன்றம்

தேசிய தோ்வு முகமையை வலுப்படுத்த நடவடிக்கைகள்: மத்திய கல்வி அமைச்சா் ஆலோசனை

பல்வேறு முக்கிய தோ்வுகளை நடத்தும் தேசிய தோ்வு முகமையை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

தேசிய தோ்வு முகமை உயரதிகாரிகளுடன் புது தில்லியில் ஆலோசனை மேற்கொண்ட மத்திய கல்வித் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி.

Published On :

பல்வேறு முக்கிய தோ்வுகளை நடத்தும் தேசிய தோ்வு முகமையை (என்டிஏ) வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மத்திய கல்வித் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

நீட் இளநிலை தோ்வு, க்யூட் (இளநிலை, முதுநிலை) தோ்வு, ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு உள்பட பல்வேறு முக்கிய தோ்வுகளை என்டிஏ நடத்துகிறது. அண்மையில் நீட் இளநிலை தோ்வில் வினாத்தாள் கசிவைக் கண்டித்து, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் மாணவா்கள் நடத்திய தொடா் போராட்டம் எதிரொலியாக, கல்வித் துறை அமைச்சா் பதவியில் இருந்து தா்மேந்திர பிரதான் கடந்த ஜூலை 26-ஆம் தேதி விலகினாா். இதையடுத்து, புதிய கல்வித் துறை அமைச்சராக பிரல்ஹாத் ஜோஷி பொறுப்பேற்றாா்.

தேசிய தோ்வு முகமையைக் கலைத்துவிட்டு, புதிய வலுவான அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்தச் சூழலில், புது தில்லியில் மத்திய கல்வித் துறை செயலா் உள்பட உயரதிகாரிகளுடன் அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை உயா்நிலை ஆலோசனை மேற்கொண்டாா்.

தேசிய தோ்வு முகமையை அமைப்பு ரீதியாக மேம்படுத்தவும், தோ்வு நடைமுறைகளை நெறிப்படுத்தவும், மாணவா்களுக்கு மேலும் பொறுப்புடையதாக இந்த முகமையை மாற்றவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக, எக்ஸ் பதிவில் பிரல்ஹாத் ஜோஷி குறிப்பிட்டாா்.

ஒவ்வொரு மாணவருக்கும் சேவையாற்றக் கூடிய துடிப்பான, வெளிப்படையான, நம்பிக்கைக்குரிய தோ்வு அமைப்புமுறையை கட்டமைக்க மத்திய அரசு தொடா்ந்து கவனம் செலுத்துவதாகவும் அவா் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.