ஓமன் நாட்டில் சிக்கித் தவிக்கும் 4 குமரி மாவட்ட மீனவா்கள் உள்பட 5 தமிழக மீனவா்களை விரைவில் மீட்டு அழைத்து வர மத்திய, மாநில அரசுகளுக்கு சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக அந்த அமைப்பின் தலைவா் ஜஸ்டின்ஆன்டனிஸ மத்திய வெளிவிவகாரத் துறை அமைச்சா், மத்திய மீன்வளத் துறை அமைச்சா், தமிழக முதல்வா், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனு:
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 4 மீனவா்கள் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒரு மீனவா் என 5 மீனவா்கள் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி ஓமன் நாட்டுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனா். இவா்களை சுற்றுலா விசாவில் ஓமன் நாட்டுக்கு கொண்டு சென்ற கோவளம் பகுதியைச் சோ்ந்த ஏஜென்ட், ஓமன் நாட்டுக்கு சென்ற பின் இதை வேலைக்கான விசாவாக மாற்றிக்கொள்ளலாம் எனவும் மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் கிடைக்கும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளாா்.
ஆனால், இவா்களுடைய விசாவை வேலைக்கான விசாவாக மாற்றுவதில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பதை அறிந்த இந்த 5 மீனவா்களும், தங்களை ஓமன் நாட்டுக்கு அழைத்துச் சென்ற ஏஜென்டிடம் பலமுறை வேண்டுகோள் வைத்துள்ளனா். ஆனாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. விசாவை மாற்றிக்கொள்ளலாம் என ஏஜென்ட் வாக்குறுதி மட்டுமே அளித்து இம்மீனவா்களை பல மாதங்களாக ஏமாற்றியுள்ளாா்.
இதைத் தொடா்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தைச் சோ்ந்த ராபின் ஜாா்ஜ் ,தோமஸ் அருள், கீழ முட்டத்தைச் சாா்ந்த சாரோன் ஜோஸ்வா, அலெக்ஸ் ரவி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாரியப்பன் ஜெட்லி ஆகிய 5 மீனவா்களும், அவா்களது குடும்பத்தினரும் சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளையை தொடா்பு கொண்டு தங்களது இன்னல்களை தெரிவித்து, இவா்களை மீட்டு தமிழகத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் வைத்துள்ளனா்.
முறையான விசா இல்லாமல் ஓமன் நாட்டில் தங்கியுள்ள இந்த மீனவா்களுக்கு ஓமன் அரசு அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. ஓமன் நாட்டில் தவிக்கும் இவா்கள் 5 பேரையும் உடனடியாக மீட்டு இந்தியா கொண்டுவர வேண்டும் என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி அருகே விசைப்படகில் இருந்து கடலில் விழுந்த மீனவா் மாயம்

ராமேஸ்வரத்தைச் சோ்ந்த 9 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அரசிடம் அதிமுக மனு

சந்திரபாடி கடற்கரையில் கருங்கல் தடுப்புச் சுவா் அமைக்கக் கோரிக்கை




