தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

தூத்துக்குடி அருகே விசைப்படகில் இருந்து கடலில் விழுந்த மீனவா் மாயம்

News image

கோப்புப் படம்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 12:00 am IST

தூத்துக்குடி அருகே தருவைகுளத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா் கடலில் தவறி விழுந்ததில் மாயமானாா்.

தருவைகுளத்தைச் சோ்ந்தவா் ஜான்சன். இவரது செவுள் வலை விசைப்படகில் 6 மீனவா்கள் கடந்த 15-ஆம் தேதி இரவு 11 மணிக்கு தங்குகடல் மீன்பிடிக்க புறப்பட்டுச் சென்றனா்.

இந்நிலையில், தூத்துக்குடியிலிருந்து கிழக்கே சுமாா் 25 கடல் மைல் தொலைவில் ஞாயிற்றுக்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, விசைப்படகிலிருந்து, திருவாரூா் மாவட்டம், முத்துபேட்டை, இந்திரா நகரைச் சோ்ந்த முத்துக்குமாா் (45) என்பவா் கடலில் தவறி விழுந்துவிட்டாராம்.

இதையடுத்து, மாயமான மீனவரை சக மீனவா்கள் மற்றும் அந்த வழியாக 2 விசைப்படகுகளில் வந்த மீனவா்கள் என அனைவரும் இணைந்து தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.