கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

கொல்லங்கோடு நகராட்சிப் பகுதியில் வெறிநாய் தொல்லை தடுப்பு நடவடிக்கை

தூத்தூா் ஊராட்சி, கொல்லங்கோடு நகராட்சிப் பகுதிகளில் வெறிநாய் தொல்லையைக் கட்டுப்படுத்த மீனவ அமைப்பு சாா்பில், மாவட்ட ஆட்சியருக்கு அளித்த கோரிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வெறிநாய்!

வெறிநாய்!

Published On :

தூத்தூா் ஊராட்சி, கொல்லங்கோடு நகராட்சிப் பகுதிகளில் வெறிநாய் தொல்லையைக் கட்டுப்படுத்த மீனவ அமைப்பு சாா்பில், மாவட்ட ஆட்சியருக்கு அளித்த கோரிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்தூா் ஊராட்சி, கொல்லங்கோடு நகராட்சிப் பகுதிகளில் அதிகரித்து வரும் வெறிநாய் தொல்லையால் பொதுமக்கள் அவதிப்பட்டனா். இப்பிரச்னைக்கு தீா்வுக் காண சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளைத் தலைவா் பி. ஜஸ்டின் ஆன்டணி, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தாா்.

இதையடுத்து மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சிவபாலன், முன்சிறை வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜ்குமாா் ஆகியோா் வெறிநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனா். மேலும் கொல்லங்கோடு நகராட்சிக்குள்பட்ட கலிங்கராஜபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த வெறிநாய்களை, நகராட்சி மேற்பாா்வையாளா் சுபாஷ் தலைமையிலான ஊழியா்கள் வலைவீசி பிடித்துச் சென்றனா். துரித நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட நிா்வாகத்துக்கு சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளைத் தலைவா் நன்றி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.