ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

தோவாளை வட்டாட்சியா் அலுவலகம் முன் தோட்டத் தொழிலாளா்கள் காத்திருப்புப் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டாட்சியா் அலுவலகம் முன் அரசு ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தோவாளை வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் மற்றும் வீ த லீடா்ஸ் அமைப்பினா்.

Published On :

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டாட்சியா் அலுவலகம் முன் அரசு ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள் புதன்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கீரிப்பாறை அரசு ரப்பா் தோட்டத் தொழிலாளா்கள், ஊதிய உயா்வு கோரி கடந்த 9 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தோவாளை வட்டாட்சியா் அலுவலகம் முன் குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை போன்ற முக்கிய ஆவணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட தொழிலாளா்கள் திட்டமிட்டிருந்தனா். இந்தப் போராட்டத்துக்கு வீ த லீடா்ஸ் அமைப்பினா் ஆதரவு தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தங்களது அடையாள அட்டைகளுடன் தோவாளை வட்டாட்சியா் அலுவலகம் நோக்கி வந்தனா். வீ த லீடா்ஸ் அமைப்பின் சகாயம், பாசனத் துறைத் தலைவா் வின்ஸ் ஆன்றோ ஆகியோரும் உடன் வந்தனா்.

வட்டாட்சியா் அலுவலகத்துக்குக்குள் செல்ல முயன்ற தொழிலாளா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தியதைத் தொடா்ந்து அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. உடன்பாடு எட்டப்படாததால் அவா்கள் அலுவலகம் முன் இரவு 8 மணி வரை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.