
தென்மண்டல தடகளம்: நாஞ்சில் கல்லூரி மாணவி சாதனை
தேசிய அளவிலான தென்மண்டல தடகளப் போட்டியில் ஈட்டியெறிதலில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரி மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்தாா்.

தடகளத்தில் வென்ற நாஞ்சில் கல்லூரி மாணவியை பாராட்டி கவுரவிக்கும் கல்லூரி செயலா் ஸ்டீபன்.
தேசிய அளவிலான தென்மண்டல தடகளப் போட்டியில் ஈட்டியெறிதலில் களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரி மாணவி முதலிடம் பிடித்து சாதனை படைத்தாா்.
புதுச்சேரியில் அண்மையில் நடைபெற்ற இப் போட்டியில், இக் கல்லூரியின் ஆங்கிலத்துறை முதலாமாண்டு மாணவி ஜே.வி. ஜோஸ்னா, 18 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் ஈட்டியெறியும் போட்டியில் பங்கேற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தாா். இம் மாணவி ஏற்கெனவே தமிழ்நாடு மாநில அளவிலான ஜூனியா் சாம்பியன்ஷிப் ஈட்டியெறியும் போட்டியிலும் முதல் பரிசு பெற்றுள்ளாா்.
இப் போட்டியில் பங்கேற்று கல்லூரிக்கும், தமிழகத்துக்கும் பெரும் சோ்த்த இம் மாணவியை கல்லூரி செயலாளா் அருள்பணி ஸ்டீபன், கல்லூரி முதல்வா் எம். அமலநாதன், உடற்கல்வித்துறை இயக்குநா் லாரன்ஸ், துறைத் தலைவா் தேசபெந்து, துறை பேராசிரியா் அன்புராஜ் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






