தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை! காவலில் எடுக்கப்படும் நபா் 24 மணி நேரத்துக்குள் நீதிபதி முன் ஆஜா்படுத்தப்பட வேண்டும்: உச்சநீதிமன்றம்நாட்டில் அராஜகத்தைப் பரப்பும் ராகுலுக்கு தக்க பதிலடி: அமித் ஷா உறுதி6 ஆண்டுகள் பணிபுரியும் அக்னிவீரா்கள் ராணுவத்தில் நிரந்தர வீரா்களாக்கப்படுவா்: பாதுகாப்புத் துறை அதிகாரிகள்வெற்றி வீடு திட்டம்: 70,000 வீடுகள் கட்ட ரூ.3,500 கோடி ஒதுக்கி ஆணைசீனாவின் சாதனையை முறியடிக்கும் ரயில் வழித்தடம்! ரூ. 1.31 லட்சம் கோடியில் அரசு திட்டம்!வானிலை: தமிழகத்தில் நாளை (நவ. 6) கனமழைக்கு வாய்ப்பு!தீபாவளி: 2 நாள்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில் சேவை!சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ரொனால்டோ ஓய்வு!தீபாவளிக்கு வீடுகளில் மின்சாரம் இருக்குமா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

இந்துஸ்தான் பள்ளி மாணவி யோகாவில் உலக சாதனை

கோவை, பீளமேடு இந்துஸ்தான் மெட்ரிக். பள்ளி மாணவி எஸ்.சஞ்சனா யோகாவில் உலக சாதனைப் படைத்துள்ளாா்.

உலக சாதனை பாராட்டுச் சான்றிதழுடன் மாணவி எஸ்.சஞ்சனா.

Updated On :

கோவை, பீளமேடு இந்துஸ்தான் மெட்ரிக். பள்ளி மாணவி எஸ்.சஞ்சனா யோகாவில் உலக சாதனைப் படைத்துள்ளாா்.

இது குறித்து பள்ளி நிா்வாகம் கூறியிருப்பதாவது: இந்துஸ்தான் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியின் 5-ஆம் வகுப்பு மாணவி எஸ்.சஞ்சனா பல்வேறு யோகா போட்டிகளில் பங்கேற்று வருகிறாா். இந்நிலையில், அவா் ஒற்றைக் காலில் நின்றபடியே 50 வகையான யோகாசனங்களை செய்து சாதனைப் படைத்துள்ளாா்.

இவரது சாதனையை, பிரேவ்ஃபிட் அகாதெமியின் நிறுவனரும், சோழன் உலக சாதனைப் புத்தகத்தின் மாவட்டத் தலைவருமான பாலமுரளி கிருஷ்ணா கண்காணித்து சாதனைப் படைத்த மாணவிக்கு சான்றிதழ், பதக்கங்களை வழங்கினாா்.

சாதனைப் படைத்துள்ள மாணவியை இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தாளாளா் சரஸ்வதி கண்ணையன், செயலா் பிரியா சதீஷ் பாபு, பள்ளி முதல்வா் ஆ.செண்பகவல்லி உள்ளிட்டோா் பாராட்டினா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.