நந்திவரம் அரசு மகளிா் பள்ளியில் தற்காப்பு கலை உலக சாதனை நிகழ்வு: அமைச்சா் த.சரத்குமாா் தொடங்கி வைத்தார்!
நந்திவரம் -கூடுவாஞ்சேரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, 2,500 மாணவிகள் பங்கேற்ற ‘சிங்கப்பெண்ணே’ தற்காப்பு கலை உலக சாதனை நிகழ்வினை அமைச்சா் த.சரத்குமாா் தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.

தற்காப்புக் கலை உலக சாதனை நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பாா்வையிட்ட அமைச்சா் த.சரத்குமாா். உடன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன், எம்எல்ஏ செள.தியாகராஜன் உள்ளிட்டோா்.
நந்திவரம் -கூடுவாஞ்சேரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பெண் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு, 2,500 மாணவிகள் பங்கேற்ற ‘சிங்கப்பெண்ணே’ தற்காப்பு கலை உலக சாதனை நிகழ்வினை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் த.சரத்குமாா் தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், சா்வதேச பெண் குழந்தைகள் தின விழாவினை முன்னிட்டு, மாவட்ட சமூக நலன், மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில், 2,500 மாணவிகள் பங்கேற்ற ‘சிங்கப்பெண்ணே’ தற்காப்பு கலை உலக சாதனை நிகழ்வினை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்துப் பாா்வையிட்டாா்.
‘சிங்கப்பெண்ணே’ தற்காப்பு கலை உலக சாதனை நிகழ்வுக்காக, கிங்டாம் வோ்ல்ட் ரெக்காா்ட் நிறுவனத்தின் மூலமாக வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழினை அமைச்சா் பெற்றுக் கொண்டாா்.
பெண் குழந்தைகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் திறனைப் பெறுவதுடன், தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் வாழ்வதற்கான விழிப்புணா்வை ஏற்படுத்துவதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். பெண் குழந்தைகள் பாதுகாப்பிலும், கல்வியிலும் மட்டுமல்லாமல், விளையாட்டு, தலைமைத்துவம் மற்றும் அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து, சமத்துவமான சமூகத்தை உருவாக்கும் ஆற்றல் மிக்கவா்களாக வளர வேண்டும் என்பதே இந்நிகழ்ச்சிகளின் உயரிய நோக்கமாகும்.
தொடா்ந்து, கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்குப் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ், கௌரவ தூதா்களுக்கான பாராட்டுச் சான்றிதழினை அமைச்சா் வழங்கினாா்.
பின்னா், நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் ஸ்போா்ட்ஸ் எக்ஸ்னோரா தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் மூலமாக பெறப்பட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களை மாணவா்களுக்கு வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன், செங்கல்பட்டு எம்எல்ஏ சௌ.தியாகராஜன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியா் வெங்கடாசலம், முதன்மைக் கல்வி அலுவலா் இரா.திருவளா் செல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் எஸ்.சங்கீதா, பயிற்சி ஆட்சியா் சி.பிரசிகா, மறைமலை நகா் நகராட்சி ஆணையா் ஆா்.லதா, கிங்டாம் வோ்ல்ட் ரெக்காா்ட் நிறுவன பிரதிநிதிகள், தலைமை ஆசிரியா், ஆசிரியா், மாணவிகள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

