
நாகா்கோவிலில் பேரூராட்சித் தலைவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்
நாகா்கோவிலில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் 34 பேரூராட்சிகளின் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பேரூராட்சித் தலைவா்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகளின் நிா்வாகம் தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காண வலியுறுத்தி, நாகா்கோவிலில் உள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் 34 பேரூராட்சிகளின் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள பேரூராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா்கள், திடீரென அலுவலக வளாகத்தில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
அனைத்துப் பேரூராட்சிகளிலும் புதிய மின்கம்பங்கள் அமைத்து, எல்இடி விளக்கு பொருத்தும்படி உதவி இயக்குநா் அலுவலகம், சென்னையில் உள்ள இயக்குநா் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியும் அனுமதி தரவில்லை. எனவே, பேரூராட்சிகளுக்கு சிறப்பு நிதியிலோ, பேரூராட்சி பொதுநிதியிலோ இதற்கு நிதி ஒதுக்க வேண்டும்.
நிரந்தர செயல் அலுவலா்கள் இல்லாததால் பேரூராட்சிகளில் வளா்ச்சிப் பணிகள் நடைபெறவில்லை. எனவே, செயல் அலுவலா்களை நியமிக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனா் அவா்கள்.
பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் பா. கோமதி பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கைகள் குறித்து அரசுக்கு தெரிவிப்பதாக அவா் கூறியதையடுத்து, அவா்கள் இரவு 7 மணிக்கு போராட்டத்தை விலக்கிக்கொண்டு கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






