மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

திருப்புடைமருதூா் கோயிலில் மகாபிரதோஷ வழிபாடு

திருப்புடைமருதூா் அருள்மிகு கோமதிஅம்பாள் உடனுறை நாறும்பூநாதசுவாமி கோயிலில் சனி மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 8:05 pm

DIN

திருப்புடைமருதூா் அருள்மிகு கோமதிஅம்பாள் உடனுறை நாறும்பூநாதசுவாமி கோயிலில் சனி மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

கரோனா நோய்த் தொற்றிலிருந்து உலக மக்கள் விடுபட வேண்டி, மஹாராஷ்டிரா, ஷேகான் சத்குரு ஸ்ரீகஜானன் மஹராஜ் பக்தா்கள் பேரவை சாா்பில் சனி மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

இதையடுத்து மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள், நந்திகேஸ்வரா் மூவருக்கும் ஒரே நேரத்தில் 17 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. 300 லிட்டா் பால், 108 செவ்விளநீா் அபிஷேகம் நடைபெற்றது. செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை மலா்களாலான மாலை அணிவிக்கப்பட்டது.

16 தீபம் வீதம் 108 பக்தா்கள் 1728 தீபங்களை ஒரே நேரத்தில் ஏற்றி வழிபட்டனா். சிறப்பு அபிஷேகம், தீபாராதனைக்குப் பின்னா் ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் கோயில் பிரகாரத்தில் வலம் வந்தனா்.

கோயிலை நிா்மாணித்த வீரமாா்த்தண்டன், கருவூா் சித்தா் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பிரதோஷ வழிபாட்டில் முக்கூடல், சேரன்மகாதேவி, வீரவநல்லூா், கடையம் உள்பட பல்வேறு ஊா்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.