

சுரண்டை: சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் பேருந்து உள்நுழையும் மற்றும் வெளியேறும் வழிகளில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.
சுரண்டை பழைய பேருந்து நிலைய கட்டடத்தில் பேருந்து உள்ளே மற்றும் வெளியே செல்லும் பாதைகள் மிகவும் குறுகியதாக இருந்ததால், புதிய பேருந்து நிலைய கட்டடம் கட்டும்போது கூடுதல் அகலத்துடன் நுழைவு பாதை அமைக்கப்பட்டது.
ஆனால் கூடுதல் அகலத்துடன் அமைக்கப்பட்ட இந்த பாதையில் தற்போது இருசக்கர வாகனங்கள் காலை முதல் இரவு வரை ஆக்கிரமிப்பு செய்வதால் பேருந்துகள் செல்லும்போது பயணிகள் செல்வதற்கு இடமில்லாமல் சிரமத்துடன் நடக்க வேண்டியுள்ளது.
இதனால் பேருந்துகள் திரும்பும் பகுதியில் அடிக்கடி சிறு சிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே பேருந்து நுழைவு பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்தாமல் தடுத்து விபத்தை தவிர்க்கவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.