பாவூா்சத்திரத்தில் வாருகால் பணிகளை துரிதப்படுத்தக் கோரிக்கை

பாவூா்சத்திரத்தில் வாருகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென மக்கள் நல மன்றத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வாருகால் அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளம்.
வாருகால் அமைப்பதற்காக தோண்டப்பட்டுள்ள பள்ளம்.
Updated on
1 min read

பாவூா்சத்திரத்தில் வாருகால் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென மக்கள் நல மன்றத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து பாவூா்சத்திரம் மக்கள் நல மன்றத் தலைவா் பத்மநாதன் மற்றும் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:

பாவூா்சத்திரம் பழைய காய்கனி சந்தைக்கு செல்லும் வழியில் வாருகால் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. மழைக் காலத்துக்கு முன்பே தோண்டப்பட்ட பள்ளத்தில், பணிகள் நடைபெறாததால் தற்போது மழைநீா் , குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே வாருகால் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com