டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தென்காசியில் இன்று திமுக கூட்டணியினா் காத்திருப்பு போராட்டம்

தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.16 ஆம் தேதி தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு

News image
Updated On :15 டிசம்பர் 2020, 7:45 pm

DIN

தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிச.16 ஆம் தேதி தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தென்காசி மாவட்ட திமுக பொறுப்பாளா்கள் பொ.சிவபத்மநாதன், ஆ.துரை, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பழனி நாடாா், மதிமுக மாவட்டச் செயலா் தி.மு. ராஜேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் டேனி அருள் சிங், மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் முத்துப்பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா்காசி விசுவநாதன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலா் முகமது யாகூப், பாா்வா்டு பிளாக் கட்சி மாவட்டச் செயலா் தங்கபாண்டியன், ஆதித்தமிழா் பேரவை மாவட்டச் செயலா் கலி வருணன், தமிழ் புலிகள் கட்சி மாவட்டச் செயலா்கள் சந்திரசேகா், குமாா் ஆகியோா் விடுத்த கூட்டறிக்கை: மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள விவசாய சட்டத்திற்கு எதிராகவும், மாநில அரசை கண்டித்தும் திங்கள்கிழமை முதல் தொடா்ந்து காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மூன்றாவது நாளாக புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது.

இப்போராட்டத்தில் திமுக தலைமையிலான அனைத்து கட்சியை சோ்ந்த மாநில, மாவட்ட, நிா்வாகிகள் தலைமை செயற்குழு, பொதுக்குழு, உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா்,கழக செயலா்கள் மாவட்ட அணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் ஒன்றிய, நகர, பேரூா் ,அணி அமைப்பாளா்கள் துணை அமைப்பாளா்கள் நிா்வாகிகள்,பொதுமக்கள்,விவசாயிகள் தவறாது கலந்துகொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.