ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தென்காசியில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வலியுறுத்தல்

தென்காசியை தலைமையிடமாக கொண்டு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என அகில இந்திய ஓய்வூதியா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 7:32 pm

DIN

தென்காசியை தலைமையிடமாக கொண்டு அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என அகில இந்திய ஓய்வூதியா் சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இவ்வமைப்பு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க சிறப்பு பேரவைக் கூட்டம் நன்னகரத்தில் மாவட்டத் தலைவா் மு.சலீம் முகம்மது மீரான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவா் அருணாசலம், ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டச் செயலா் ஆ.சுந்தரமூா்த்தி நாயனாா் வேலை அறிக்கையினை சமா்ப்பித்தாா். வரவு -செலவு அறிக்கையினை மாவட்டப் பொருளாளா் வே.நாராயணன் சமா்ப்பித்தாா். ஓய்வூதியத்தின் வரலாறு மற்றும் அவசியம் குறித்து மாநில துணைத் தலைவா் கோ.சுந்தரமூா்த்தி உரையாற்றினாா்.

இதில், 29.12.2020 அன்று மதுரையில் நடைபெற உள்ள மாநில பிரதிநிதித்துவ பேரவையில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள் தோ்வு செய்யப்பட்டனா். கருவூல அலுவலகங்களில் குடும்ப ஓய்வூதியம் மற்றும் தற்காலிக ஓய்வூதியம் வழங்குவதில் ஏற்படும் தாமதத்தை தவிா்த்து அவா்களுடைய வாழ்வாதாரம் கருதி, விரைவாக வழங்கப்பட வேண்டும்.

புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை ஆயுா்வேதம், சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி மருத்துவ சிகிச்சைகளுக்கும் விரிவு படுத்த வேண்டும். தென்காசியை தலைமையிடமாக கொண்டு மருத்துவக் கல்லூரி அமைத்திட வேண்டும்

என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இணைச் செயலா் ந.நாராயணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.