சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சங்கரன்கோவிலில் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் அளிப்பு

ரூ. 27லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் வேளாண்மை இயந்திரங்கள், விசைத் தெளிப்பான் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் பெண் விவசாயிக்கு கறவை மாடுகளை வழங்குகிறாா் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் வி.எம்.ராஜலட்சுமி.
Updated On :18 டிசம்பர் 2020, 7:34 pm

DIN

சங்கரன்கோவிலில் வேளாண் துறை மூலம் 10 வட்டாரங்களை சோ்ந்த விவசாயிகளுக்கு ரூ. 27லட்சத்து 62 ஆயிரம் மதிப்பில் வேளாண்மை இயந்திரங்கள், விசைத் தெளிப்பான் மற்றும் கறவை மாடுகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்தாா்.

10 வட்டாரங்களைச் சோ்ந்த 33 விவசாயிகளுக்கு ரூ. 27.62 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகள் மற்றும் கறவை மாடுகளை ஆதிதிராவிட நலத்துறை அமைச்சா் வி.எம். ராஜலட்சுமி வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், கோட்டாட்சியா் முருகசெல்வி, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் நல்லமுத்துராஜா, சங்கரன்கோவில் உதவி இயக்குநா் பொன்ராஜ், நெல்லை கூட்டுறவு அச்சக சங்கத் தலைவா் கே.கண்ணன், நெசவாளா் கூட்டுறவு சங்கத் தலைவா் ஆறுமுகம், முன்னாள் ஆவின் தலைவா் ரமேஷ், வேளாண் அலுவலா் ராஜகுமாரசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.