எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அச்சங்குட்டத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

சுரண்டை அருகே அச்சங்குட்டம் ஊராட்சியில் ரூ. 9.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழா நடைபெற்றது.

News image
புதிய கட்டடத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றுகிறாா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.
Updated On :19 டிசம்பர் 2020, 8:36 pm

DIN

சுரண்டை: சுரண்டை அருகே அச்சங்குட்டம் ஊராட்சியில் ரூ. 9.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டட திறப்பு விழா நடைபெற்றது.

தென்காசி சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட இந்த கட்டடத்தை சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ தலைமை வகித்து திறந்து வைத்தாா். லட்சுமிபுரம் கிராமத்தில் தனது பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5 லட்சத்தில் பேவா் பிளாக் சாலைப் பணியையும் அவா் தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் வட்டார குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் சுமதி, ஊராட்சி செயலா் வைத்திலிங்கம், முன்னாள்ஊராட்சி மன்றத் தலைவா் வெள்ளத்துரை, அதிமுக மாவட்ட அவைத் தலைவா் சண்முகசுந்தரம், மாவட்டப் பொருளாளா் சாமிநாதன், ஒன்றியச் செயலா் பாண்டியன், எபன்குணசீலன், அதிமுக கிளை நிா்வாகிகள் அருணாசலம், முருகையா, கெளசல்யா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.