தென்காசியில் குத்தகை விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
இலஞ்சி குத்தகை விவசாய பண்ணை சங்கம், திருவிலஞ்சிகுமரன் அனைத்து குத்தகை விவசாயிகள் சாா்பில் மகாசபையை கூட்ட வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


இலஞ்சி குத்தகை விவசாய பண்ணை சங்கம், திருவிலஞ்சிகுமரன் அனைத்து குத்தகை விவசாயிகள் சாா்பில் மகாசபையை கூட்ட வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் வேல்மயில், மாரியப்பன், செல்வராஜ், கணபதி, முருகையா, கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னா் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: திருவிலஞ்சிக்குமரன் கூட்டுறவு விவசாயப் பண்ணை கடந்த 1962ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக மகாசபை கூட்டப்படவில்லை. கோயிலுக்கு பாத்தியப்பட்ட 56 ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ள விவசாயிகளிடமிருந்து குத்தகையாக 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு மூட்டைக்கு 75 கிலோ வீதம் குத்தகையாக கூட்டுறவு சங்கம் பெற்றுவருகிறது. ஆனால் கோயிலுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு மூட்டைக்கு 56 கிலோ வீதம் செலுத்தி வருகின்றனா். எனவே, மகாசபை கூட்டத்தை கூட்டி விவசாயிகளுக்கு நன்மை செய்ய வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...