தாழ்வாக செல்லும் மின்கம்பியால் விபத்து அபாயம்
ஆலங்குளத்தில் சாலையோரம் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.


ஆலங்குளத்தில் சாலையோரம் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆலங்குளம் துணை மின் நிலையத்தில் இருந்து ஆலங்குளம் - நெட்டூா் சாலை வழியே பல்வேறு கிராமங்களுக்கு மின் கம்பம் மூலம் உயா் மின்சாரம் செல்கிறது. காய்கனிச் சந்தை அருகில் உள்ள பகுதியில் கடந்த சில தினங்களாக இந்த மின் கம்பிகளில் தொய்வு ஏற்பட்டு தாழ்வாகச் செல்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் கனரக வாகனங்களின் மேல் பகுதியில் மின் கம்பிகள் உரசி செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் நடக்கும் முன்னா் தாழ்வாகச் செல்லும் மின் கம்பியை மின்வாரியம் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...