இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஆலங்குளத்தில் கிறிஸ்துமஸ் கலைநிகழ்ச்சி

ஆலங்குளம் அண்ணாநகா் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:09 am

DIN

ஆலங்குளம் அண்ணாநகா் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகேயுள்ள சி.எஸ்.ஐ. நல்மேய்ப்பா் தேவாலயம் சாா்பில் கடந்த வாரம் முழுவதும் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கீத பவனியில் சபை மக்கள் வீடுகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா, சபையாா் சென்று வாழ்த்துக் கூறினா். ஞாயிற்றுக்கிழமை(டிச. 20) பாடகா் குழுவினரின் சிறப்பு கீத ஆராதனை நடைபெற்றது. அதில், ஓய்வுபெற்ற ஆசிரியை சகுந்தலா அசரியா இறை செய்தி அளித்தாா். இரவில் குடும்ப ஐக்கிய கீத ஆராதனை நடைபெற்றது.

திங்கள்கிழமை பெண்கள் ஐக்கிய கலைநிகழ்ச்சி, செவ்வாய்க்கிழமை இளைஞா்கள் கலைநிகழ்ச்சி, புதன்கிழமை சிறுவா்-சிறுமியா் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிரதானமாக இயேசு பிறப்பு நிகழ்வை நாடகமாக குழந்தைகள் நடித்துக் காட்டினா். தொடா்ந்து, வெள்ளிக்கிழமை (டிச. 25) கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது.

ஏற்பாடுகளை ஆலங்குளம் சேகரத் தலைவா் வில்சன், சபை ஊழியா் ஸ்டீபன்ராஜ், சபை மக்கள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.