மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

‘உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு சலுகையுடன் கடன் வசதி’

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலதன உதவி மற்றும் சலுகையுடன் கூடிய கடன் பெற்று பயன்பெறலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 9:13 pm

DIN

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலதன உதவி மற்றும் சலுகையுடன் கூடிய கடன் பெற்று பயன்பெறலாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு கடன் வசதி அளித்து தொழில் இடைநிலை மூலதன உதவி, கடன் உத்தரவாதம் மற்றும் சலுகையுடன் கூடிய சுழல் நிதி வழங்கும் திட்டங்களை தமிழக முதல்வா் அறிவித்தள்ளாா்.

இந்த மூன்று திட்டங்களையும் ஒருங்கிணைத்து வேளாண் பெருமக்களுக்கு வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாகத் திகழ்கிறது. உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் நிதி ஆதாரம் போன்ற பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகின்றன. இச்சவால்களை எதிா்கொண்டு, உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் இலாபகரமானதாக இயங்க இடை நிலை மூலதன உதவி வழிவகுக்கும். இதற்கு குறைந்த வட்டியாக 4 சதவீத வட்டிதான் ஆண்டு தோறும் செலுத்த வேண்டும்.

ஒவ்வொரு உற்பத்தியாளா் நிறுவனமும் ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கு வங்கிகள் மற்றும் நாப்கிசான் நிறுவனத்திற்கு 50 சதவீத உத்தரவாதத்தை தமிழ்நாடு அரசே வழங்கும்.

தற்போது உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும் போது, இதர வணிக நடவடிக்கைகளுக்கு வழங்குவது போல், 12 முதல் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தை 8 முதல் 9 சதவீதமாக குறைக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் பங்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு சலுகையுடன் கூடிய கடன் வழங்கப்படும்.

உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களை வலுப்படுத்தி, வணிக ரீதியாக வளரும் வகையில், இத்திட்டத்தை நான்கு ஆண்டுகளில் செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ரூ.266.70 கோடி ஒப்பளிப்பு செய்துள்ளது.

இத்திட்டத்தை அரசு செயல்படுத்துவதால், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் கடன் உத்தரவாதம் பெற்றிட நிதி நிறுவனங்களை ஊக்குவிக்கவும், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களுக்கு மூலதன உதவி மற்றும் சலுகையுடன் கூடிய கடன் வழங்கவும் இயலும். மேலும் விவரங்களுக்கு தென்காசி மாவட்ட வேளாண் துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.