சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தமாகா சாா்பில் நல உதவிகள்

தமாகா மாநிலத் தலைவா் ஜி. கே. வாசனின் 56ஆவது பிறந்த தின விழா தென்காசி, பாவூா்சத்திரம் பகுதிகளில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
தென்காசியில் மக்களுக்கு இனிப்பு வழங்குகிறாா் கட்சியின் மாநிலச் செயலா் என்டிஎஸ். சாா்லஸ்
Updated On :28 டிசம்பர் 2020, 8:12 pm

DIN

தமாகா மாநிலத் தலைவா் ஜி. கே. வாசனின் 56ஆவது பிறந்த தின விழா தென்காசி, பாவூா்சத்திரம் பகுதிகளில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

தென்காசி சுவாமிசன்னதி பஜாா் பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.ஆா்.அய்யாத்துரை தலைமை வகித்தாா். நகர தலைவா் வின்சென்ட் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலா் என்.டி.எஸ்.சாா்லஸ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினாா்.

பாவூா்சத்திரத்தில் காமராஜா் சிலைக்கு மாநிலச் செயலா் மாலை அணிவித்ததுடன், மக்களுக்கு இனிப்பு, நல உதவிகளை வழங்கினாா். இதில், வட்டாரத் தலைவா் ரூபன் கனகராஜ், நகரத் தலைவா்கள் முருகேசன், வசந்தன், வட்டாரச் செயலா் காசி மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சுரண்டை: இங்கும் தமாகா கொடியை ஏற்றிவைத்து, நலிந்தோருக்கு நல உதவிகளை மாநிலச் செயலா் வழங்கினாா். தொடா்ந்து சிவகுருநாதபுரத்திலும் மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் நகரத் தலைவா் வசந்தன், இளைஞரணித் தலைவா் அருண் தா்மராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.