புளியங்குடியில் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி வேண்டி திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்த வணிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக புளியங்குடி அனைத்து வர்த்தகர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது; பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை புளியங்குடி பகுதி மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வணிக நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி விட்ட நிலையில் புளியங்குடி பகுதியில் எந்த ஒரு வணிக நிறுவனமும் செயல்பட அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால் விவசாயிகள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருவதுடன், வாழ்வாதாரத்தையும் இழந்து வருகின்றனர்.
எனவே 18ஆம் தேதி வணிக நிறுவனங்கள் செயல்பட மாவட்ட ஆட்சியர் அனுமதி அளிக்க வேண்டும்.
இல்லையெனில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வரம் தரும் வாரம்!

பொத்தானை அழுத்தினால் பணம்..! கவனம் ஈர்க்கும் கான் சிட்டி படத் தலைப்பு டீசர்!

கருப்பு படத்தின் தயாரிப்பாளருக்கும் ஆர்.ஜே. பாலாஜிக்கும் சண்டையா?

ஈரான் போர்! குவைத் மீதான தாக்குதலில் 61 வீரர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

திருநள்ளாற்றில் சனிப் பெயர்ச்சி விழா! | Temple | ஆன்மிகம்
தினமணி வீடியோ செய்தி...

எங்களை வைத்துதான் காங்கிரஸ் கூடுதல் சீட் பெற்றார்கள்!: செங்கோட்டையன் | TVK | Vijay
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 8 முதல் 14 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

