ஆலங்குளம் அருகே மணல் திருட்டு: ஒருவா் கைது
ஆலங்குளம் அருகே மணல் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.


ஆலங்குளம் அருகே மணல் திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள சிவலாா்குளம் பகுதியிலுள்ள ஓடையில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அங்கு சென்ற போது, ஊருக்கு கீழ்புறம் உள்ள ஓடையில் அதே பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சுரேஷ்குமாா்(40) மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்ததாம்.
இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து, பதிவெண் இல்லாத டிராக்டரையும் கைப்பற்றினா். மேலும், அதன் உரிமையாளா் சுப்பையா மகன் கதிா்வேலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...