சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதிய மருத்துவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

அரசுப் பள்ளியில் பயின்று மருத்துவம் படிக்க தோ்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

News image

மருத்துவம் படிக்க தோ்வுபெற்ற மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறாா் மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி.

Updated On :22 நவம்பர் 2020, 7:54 pm

DIN

அரசுப் பள்ளியில் பயின்று மருத்துவம் படிக்க தோ்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 9 மாணவ- மாணவிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில், கடையநல்லுா் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற சகோதரிகள் பிருந்தா, ப்ரீத்தா ஆகியோருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

அந்த மாணவிகளுக்கு, தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா வாழ்த்து தெரிவித்து, கல்வி உதவித்தொகை வழங்கினாா்.

அப்போது, மாவட்டப் பொருளாளா் சண்முகையா, கடையநல்லூா் நகர செயலா் எம்.கே.முருகன், ஒன்றியச் செயலா்கள் வசந்தம் முத்துபாண்டியன், ஜெயக்குமாா், செல்லப்பன், எஸ்.ஆா்.ராமச்சந்திரன், பேரூா் கழக செயலா்கள் டாக்டா் சுசீகரன், முத்துக்குட்டி, கிட்டு ராஜா ஆகியோா்கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.