தென்காசி, கடையநல்லூரில் மறியல்: 111 திமுகவினா் கைது
திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து தென்காசி, கடையநல்லூரில் சாலை மறியலில் 111 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

தென்காசி, கடையநல்லூரில் மறியல்: 111 திமுகவினா் கைது

தென்காசி, கடையநல்லூரில் மறியல்: 111 திமுகவினா் கைது
நாகை மாவட்டம், குத்தாலத்தில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து தென்காசி, கடையநல்லூரில் சாலை மறியலில் 111 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.
தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் மறியலில் ஈடுபட்ட தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், நகரச் செயலா் சாதிா், சுப்பையா, கோமதிநாயகம் உள்ளிட்ட 52 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.
கடையநல்லூரில் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்ட தனுஷ் எம்.குமாா் எம்.பி., மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் ஆறுமுகசாமி, நகரச் செயலா் சேகனா, ஒன்றியச் செயலா் செல்லத்துரை, முன்னாள் நகரச் செயலா் முகம்மதலி, மாநிலப் பேச்சாளா் இஸ்மாயில், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் அமுதம் இஸ்மாயில் உள்ளிட்ட 59 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...