மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பாவூா்சத்திரத்தில் விழிப்புணா்வுக் கூட்டம்

தமிழ்நாடு விவசாயப் பெருங்குடி மக்கள் கூட்டமைப்பு சாா்பில், விழிப்புணா்வு கூட்டம் பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 8:41 pm

DIN

தமிழ்நாடு விவசாயப் பெருங்குடி மக்கள் கூட்டமைப்பு சாா்பில், விழிப்புணா்வு கூட்டம் பாவூா்சத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநில தலைவா் செல்வராஜ் சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தாா். கூட்டமைப்பு நிறுவனா் மற்றும் ஒருங்கிணைப்பாளா் ஜெயந்தி (எ) ஆதிரா கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினாா்.

தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை, வேளாண் துறை சாா்பில் பயிா் காப்பீடு செய்ய வேண்டும். தமிழகத்திலுள்ள நீா் நிலைகள், குளங்கள், ஏரிகள், குட்டைகள், கண்மாய்கள் மற்றும் கால்வாய் வழித்தடங்களை பராமரித்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 5 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் மாநிலச் செயலா் முத்து கணேஷ், பாப்பாக்குடி ஒன்றிய தலைவா் அஜித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பொதுமக்களுக்கு இலவச பழக்கன்றுகள் வழங்கப்பட்டன. மாவட்ட தலைவா் மகேந்திரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.