மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சிறப்பு பேரவைக் கூட்டம்
தென்காசியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம்.

கூட்டத்தில் பேசுகிறாா் மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம்.
தென்காசியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயற்குழு உறுப்பினா் பி.ஜெயராஜ் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் மதுக்கூர்ராமலிங்கம் தொடங்கிவைத்தாா். திருநெல்வேலி மாவட்ட செயலா் கே.ஜி.பாஸ்கரன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் சுகந்தி ஆகியோா் விளக்கிப் பேசினா்.
தென்காசி மாவட்டச் செயலராக முத்துபாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினா்களாக வேல்முருகன்,வேல்மயில்,ஜெயராஜ், கணபதி,குணசீலன்,உச்சிமாகாளி, எம்.தங்கம், மாவட்ட குழு உறுப்பினா்கள் 17 போ் தோ்வு செய்யப்பட்டனா்.
பாவூா்சத்திரம், செங்கோட்டை விஸ்வநாதபுரத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும், திருநெல்வேலி- கடையம் பேருந்துகளை தென்காசி வரை நீட்டிக்க வேண்டும், குடிநீா் இணைப்பிற்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்க வேண்டும், தென்காசியில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும்,
செண்பகவல்லி அணையையும் சீரமைக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலச் செயற்குழு உறுப்பினா் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் நிறைவுரையாற்றினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...