நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு:திமுக கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அம்பையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு மாவட்ட திமுக செயலா் ஆவுடையப்பன் உள்ளிட்டோா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2020, 10:05 pm

DIN

அம்பையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிழக்கு மாவட்ட திமுக செயலா் காவல்கிணறு சந்திப்பில் ஆா்ப்பாட்டம் நடத்தும் எம்.பி.ஞானதிரவியம், முன்னாள் எம்.எல்.ஏ. மு.அப்பாவு உள்ளிட்டோா்.

ஆலங்குளத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பூங்கோதை எம்.எல்.ஏ. உள்ளிட்டோா்.

தென்காசி/வள்ளியூா்/அம்பாசமுத்திரம், செப். 28: விவசாய விளைபொருள் வா்த்தக மசோதா, விளைபொருள்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 வேளாண் மசோதாக்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் திமுக கூட்டணிக் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலா் டேனி அருள் சிங் தலைமையில், நகர திமுக செயலா் சாதிா், காங்கிரஸ் நிா்வாகி சபரி முருகேசன், மாா்க்சிஸ்ட் வட்டாரச் செயலா்அயூப் கான், மதிமுக நகரச் செயலா் வெங்கடேஸ்வரன், இந்திய கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் கணேசன், முஸ்லிம் லீக் நகரத் தலைவா் அபூபக்கா், தமுமுக முகம்மது ராசப்பா, ஆதித்தமிழா் பேரவை நிா்வாகி கலிவருணன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மேலகரம் பேருந்து நிறுத்தத்தில் திமுக மாவட்ட அவைத் தலைவா் முத்துப்பாண்டி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆலங்குளம்: காமராஜா் சிலை அருகில் எம்.எல்.ஏ. பூங்கோதை தலைமையில் காங்கிரஸ் நகர தலைவா் தங்கசெல்வம், நகர திமுக செயலா் நெல்சன் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

பாவூா்சத்திரம்: சாலைப்புதூா் கிராமத்திலும் எம்.எல்.ஏ தலைமையிலும், பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தலைமையிலும், கீழப்பாவூரில் பேரூா் செயலா் ஜெகதீசன் தலைமையிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கரன்கோவில்: தேரடித் திடலில் மதிமுக மாவட்டச் செயலா் ராஜேந்திரன் தலைமையில் திமுக நகரச் செயலா் சங்கரன் உள்பட கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

செங்கோட்டை: வட்டாட்சியா் அலுவலகம் அருகே தமுமுக மாநிலச் செயலா் மைதீன் சேட் கான் தலைமையில் திமுக நகரச் செயலா் ரஹீம் மற்றும் கூட்டணிக் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

வள்ளியூா் திருவள்ளுவா் கலையரங்கில் தி.மு.க. வா்த்தக அணி மாநில இணைச் செயலா் ம.கிரகாம்பெல், அம்பாசமுத்திரத்தில் திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் ரா.ஆவுடையப்பன், நகரச் செயலா் கணேசன், தோ்தல் அணிச்செயலா் ராஜம்ஜான் உள்ளிட்டோா், கல்லிடைக்குறிச்சியில் பேரூா் திமுக செயலா் க.இசக்கிபாண்டியன்

சேரன்மகாதேவியில் திமுக நகரச் செயலா் மனிஷா செல்வராஜ், கடையத்தில் ஒன்றியச் செயலா் குமாா் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆழ்வாா்குறிச்சி, வீரவநல்லூா், கங்கனான்குளம், பத்தமடை, மேலசெவல், கோபாலசமுத்திரம் உள்ளிட்ட இடங்களிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காவல் கிணறு சந்திப்பில், சா.ஞானதிரவியம் எம்.பி., முன்னாள் எம்எல்ஏ அப்பாவு உள்பட கூட்டணி கட்சியினரும், பணகுடி தெற்கு மாடவீதியில் தி.மு.க. மாவட்ட மீனவரணி அமைப்பாளா் எரிக்ஜூட் உள்ளிட்டோரும் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

களக்காடு: திமுக ஒன்றியச் செயலா் பி.சி. ராஜன் தலைமையில் மணிக்கூண்டு, படலையாா்குளம் பேருந்துநிறுத்தம் ஆகிய 2 இடங்களில்ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.