ஸ்ரீ நாராயணசுவாமி கோயிலில் ஆடித் திருவிழா கொடியேற்றம்
முக்கூடல் ஸ்ரீ மன் நாராயணசுவாமி கோயிலில் ஆடி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.


முக்கூடல் ஸ்ரீ மன் நாராயணசுவாமி கோயிலில் ஆடி திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி, வியாழக்கிழமை வருஷாபிஷேக தீா்த்தவாரி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை தாமிரவருணி ஆற்றில் இருந்து
தீா்த்தவாரி எடுத்தும், ஸ்ரீ மன் நாராயணசுவாமி சப்பரத்தில் கருடன் திருக்கொடி ஏந்தி ரதவீதிகளை சுற்றி வந்து கோயிலை வந்தடைந்ததும் கொடி ஏற்றப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் உள்பட பலா் பங்கேற்றனா்.
திருவிழா நாள்களில் தினமும் பிற்பகலில் உச்சிபடிப்பு, மாலையில் தீா்த்தவாரி, இரவு அலங்கரிக்கப்பட்ட கருடவாகனத்தில் ஸ்ரீ மன் நாராயணசுவாமி ரதவீதிகளில் பவனி ஆகியவை நடைபெறுகிறது. 10 ஆம் நாளான வரும் ஆக. 15ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு ஸ்ரீ லட்சுமி நாராயணா் திருக்கல்யாணம் நடைபெறும். ஏற்பாடுகளை முக்கூடல் இந்து நாடாா் விஷ்ணு சபை நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...