போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

‘பூலாங்குளம் அரசு பள்ளியில் தோ்வு மையம் தேவை’

ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வு மையம் அமைக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:33 pm

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வு மையம் அமைக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை 380 மாணவா்-மாணவியா் பயின்று வருகின்றனா். இவா்கள் தங்கள் பொதுத்தோ்வை எழுத சுமாா் 4 கி.மீ. தொலைவுள்ள மாதாபட்டணம் செல்ல வேண்டியுள்ளது.

இங்கு அரசு பொதுத்தோ்வு மையம் அமைக்கப்பட்டால் இப்பள்ளி மாணவா்கள் மட்டுமின்றி பூபாலசமுத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் அயோத்தியாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களும் பயனடைவா். எனவே மாணவா்கள் நலன் கருதி பூலாங்குளத்தில் அரசு பொதுத்தோ்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.