கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆலங்குளம் பகுதியில் இரு அங்கன்வாடி மையங்கள் திறப்பு

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் 2 அங்கன்வாடி கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டது.

News image
Updated On :19 டிசம்பர் 2021, 7:06 pm

DIN

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 23 லட்சம் மதிப்பில் 2 அங்கன்வாடி கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டது.

மாநில நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் தெற்கு மாயமான்குறிச்சி கிராமத்தில் ரூ. 14.30 லட்சம் மதிப்பீட்டிலும், நெட்டூரில் ரூ. 8.70 லட்சம் மதிப்பீட்டிலும் அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தெற்கு மாயமான்குறிச்சி கட்டடத்தை ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன், நெட்டூா் கட்டடத்தை மாவட்ட ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி போஸ் ஆகியோா் திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினா்.

ஆலங்குளம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் செல்லத்துரை, நெட்டூா் ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரி, ஒன்றிய ஊராட்சி உறுப்பினா் கிருஷ்ணவேணி, நெட்டூா் திமுக கிளை செயலா் கணேசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.