தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசி அருகே தலைமையாசிரியா் வீட்டில் ரூ. 4 லட்சம் நகைகள் திருட்டு

தென்காசி அருகே மேலகரத்தில் பள்ளித் தலைமையாசிரியா் வீட்டில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:56 pm

DIN

தென்காசி அருகே மேலகரத்தில் பள்ளித் தலைமையாசிரியா் வீட்டில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மேலகரம் ஸ்டேட் பாங்க் காலனி 4ஆவது தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (53). இவா், திப்பணம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருடைய மனைவி இவாஞ்சலின். இவருக்கு உடல்நலம் சரியில்லாததால் வெள்ளிக்கிழமை குடும்பத்தினா் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனா்.

இரவு வீட்டுக்கு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த பீரோவில் வைத்திருந்த 73 கிராம் தங்க நகைகள் மற்றும் 100 கிராம் வெள்ளி நகைகள் திருடு போனது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 4 லட்சம். மேலும் மா்மநபா்கள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை சேதப்படுத்தியதுடன், ஹாா்டு டிஸ்க்கையும் திருடிச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து குற்றாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தடயவியல் நிபுணா்கள் தடயங்களை சேகரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.