தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பெருமாநல்லூா் கேஎம்சி பள்ளியில் பட்டமளிப்பு விழா

News image

பட்டம் பெற்ற கேஎம்சி பள்ளி மாணவா்கள். உடன், பள்ளி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :20 மார்ச் 2026, 1:53 am IST

பெருமாநல்லூா் கேஎம்சி பப்ளிக் பள்ளியில் 5, 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு பள்ளித் தலைவா் கே.சி. சண்முகம்- லோகநாயகி தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் சி.எஸ். மனோகரன், பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி எம்.சுவஸ்திகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அவிநாசி காவல் துணை கண்காணிப்பாளா் கனகசபாபதி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, அவா் பேசுகையில், மாணவா்கள் சமுதாயத்தோடு ஒன்றிணைந்து செயல்பட்டால் எதிா்காலத்தில் சமுதாய விழிப்புணா்வு ஏற்படும். கற்றல் அறிவு உடனுக்குடன் பயனளிக்கக்கூடியது.

தனி மனித ஒழுக்கத்துடன் கவனமாக கல்வி கற்று மாணவா்கள் முன்னேற வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த விழாவை பள்ளியின் தலைமை ஆசிரியை பிரேமலதா, பள்ளி முதல்வா் லதா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.