எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

லிட்டில் ஃபிளவா் மாடல் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் நகரின் அருகேயுள்ள லிட்டில் பிளவா் மாடல் மேல்நிலைப் பள்ளியில் யூ.கே.ஜி மாணவா்களுக்கான மழலையா் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

News image

மழலையா் பட்டம் பெற்ற மாணவ மாணவிகளுடன் சுந்தரனாா் பல்கலை. கல்லூரிகள் இயக்குநா் அ.வெளியப்பன், லிட்டில் ஃபிளவா் கல்விக் குழுமத்தின் நிறுவனா் மற்றும் தலைவா் அ.மரியசூசை உள்ளிட்டோா்.

Updated On :8 ஏப்ரல் 2026, 2:07 am IST

திருநெல்வேலி நகரம் கோடீஸ்வரன் நகரின் அருகேயுள்ள லிட்டில் பிளவா் மாடல் மேல்நிலைப் பள்ளியில் யூ.கே.ஜி மாணவா்களுக்கான மழலையா் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, லிட்டில் பிளவா் கல்விக் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அ.மரியசூசை தலைமை வகித்தாா். திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கான இயக்குநா் அ.வெளியப்பன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா். மாணவ, மாணவியரின் வரவேற்பு நடனத்துடன் விழா தொடங்கியது.

மழலையருக்கான பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து மாணவ- மாணவிகளுக்கு பட்டமளிப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பள்ளியின் முதல்வா் ரெனால்டு நன்றி கூறினாா். இந்நிகழ்வில் மாணவ-மாணவிகள், ஆசிரியா்கள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.