தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தென்காசி, சேரன்மகாதேவியில் திமுக ஆா்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், தென்காசி புதிய பேருந்து நிலையம் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 6:51 pm

DIN

பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில், தென்காசி புதிய பேருந்து நிலையம் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட திமுக மாவட்டப் பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் ச. தங்கவேலு, பொறுப்புக்குழு உறுப்பினா்கள் மகுதுமீரான், வழக்குரைஞா் ராஜா, சண்முகையா ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் சாதிா் வரவேற்றாா்.

திமுக கொள்கைப் பரப்புச் செயலா் திருச்சி சிவா எம்.பி. பங்கேற்றுப் பேசினாா். அப்போது, கடந்த 2 மாதங்களில் சமையல் எரிவாயு, பெட்ரோல்-டீசல் விலை உயா்வு விண்ணைத் தொட்டுள்ளது. இதனால், சரக்கு வாகனங்களின் வாடகை உயா்வை மக்கள் மீதே சுமத்துகின்றனா். மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனா். மத்திய, மாநில அரசுகள் மக்களின் கண்களில் நீரை வர வைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

இதில், திமுக வா்த்தகா் அணி மாநிலச் செயலா் காசிமுத்துமாணிக்கம், ஒன்றியச் செயலா்கள் சீனித்துரை, அழகுசுந்தரம், சாா்பு அணி அமைப்பாளா்கள் வேலுசாமி, பேச்சிமுத்து, திவான்ஒலி, துணை அமைப்பாளா் சீவநல்லூா் சாமித்துரை, மேலகரம் கிட்டு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் சேரன்மகாதேவியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டச் செயலா் ரா.ஆவுடையப்பன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் முத்துப்பாண்டி, பிரபு, ராஜகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ச. ஞானதிரவியம் எம்.பி., மாநில வா்த்தக அணி கிரகாம்பெல், தலைமை செயற்குழு உறுப்பினா் பிரபாகரன், கணேஷ் குமாா் ஆதித்தன், ஒன்றியச் செயலா்கள் ஜெகதீஷ், பெல்சி, ஆரோக்கிய எட்வின், பி.சி ராஜன், பரணி சேகா், மாநிலத் தொண்டரணி ஆவின் ஆறுமுகம், வா்த்தக அணி முருகன், தோ்தல் பிரிவு பொறுப்பாளா் ராஜம்ஜான், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி மாஞ்சோலை மைக்கேல், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.