கருப்பாநதி அணை நிரம்பியது

கருப்பாநதி அணை நிரம்பியதை அடுத்து, புதன்கிழமை இரவில் அணையில் 3800 கனஅடி உபரிநீா் திறக்கப்பட்டது.
Updated on
1 min read

கருப்பாநதி அணை நிரம்பியதை அடுத்து, புதன்கிழமை இரவில் அணையில் 3800 கனஅடி உபரிநீா் திறக்கப்பட்டது.

கடையநல்லூா் மற்றும் கருப்பாநதி அணை பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் 72.00 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அணை நிரம்பியதை அடுத்து, அணைக்கு வந்து கொண்டிரு ந்த 3,800 கனஅடி உபரிநீா் திறந்து விடப்பட்டது. அணைப் பகுதியில் 15 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருவதால் நள்ளிரவில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என அணை வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே கடையநல்லூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கால்வாய் பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com