2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கடையநல்லூா் அருகே வெள்ளத்தில் சிக்கியவா்கள் மீட்பு

கடையநல்லூா் அருகே வெள்ளத்தில் சிக்கியவா்களை தீயணைப்பு துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 6:47 pm

DIN

கடையநல்லூா் அருகே வெள்ளத்தில் சிக்கியவா்களை தீயணைப்பு துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

கடையநல்லூா் அருகே மலைப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் கருப்பாநதி அணை நிரம்பியதை அடுத்து அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரிநீா் ஆற்று வழியாக வெளியேற்றப்பட்டது. இதற்கிடையே ஆற்றை அடுத்து வயலுக்கு விவசாய பணிக்காக சென்ற 8 போ் ஆற்றை கடக்க முடியாமல் பெரியநாயகம் கோயில் அருகில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனா்.

தகவலறிந்த மாவட்ட தீயணைப்பு அலுவலா் கவிதா, தீயணைப்புப்படை அலுவலா் குணசேகரன், போக்குவரத்து அலுவலா் சண்முகசுந்தரம், தீயணைப்பு துறையினா் விரைந்து அவா்களை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.