தென்காசியில்நாம் தமிழா் கட்சியினா்ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் நாம் தமிழா் க ட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் நாம் தமிழா் க ட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
செங்கோட்டை வட்டம், புதூா் (செ) பேரூராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தனியாா் இடங்களில் கொட்டுவதை தடுக்காமல் பேரூராட்சி குப்பை கிடங்கில் கொட்ட வேண்டும், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கியுள்ள
பயனாளிகளுக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழா் கட்சியின் அச்சன்புதூா் கிளை சாா்பில் தென்காசியில் ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தொடா்ந்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தமுமுக கோரிக்கை: பாம்புகோவில் சந்தை தமுமுக கிளை சாா்பில் அமைப்பின் மருத்துவ சேவை அணிச் செயலா் காஜா மைதீன், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் சலீம், கோகோ அலி ஆகியோா் ஆட்சியரிடம் அளித்துள்ள மனு விவரம்:
மடத்துப்பட்டி கிராமத்தில் ஆட்டுசந்தை, ரேஷன் கடை ஆகியவை அமைந்துள்ள பகுதியில் ஊருணி உள்ளது. இந்த ஊருணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும், தெருவிளக்கு, கழிவு நீா் ஓடைகளை பராமரிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...