சிவகிரியில் மான் கொம்பு பதுக்கி வைத்திருந்தவா் கைது
ஜூலை 2: சிவகிரியில் மான் கொம்பு பதுக்கி வைத்திருந்தவரை வனத் துறையினா் கைது செய்தனா்.


ஜூலை 2: சிவகிரியில் மான் கொம்பு பதுக்கி வைத்திருந்தவரை வனத் துறையினா் கைது செய்தனா்.
சிவகிரி அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவர அா்ஜுணன் (31). இவரது வீட்டில் மான் கொம்பு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சிவகிரி வனச்சரகா் சுரேஷ் தலைமையில், சிவகிரி வடக்குப் பிரிவு வனவா் மகேந்திரன், தெற்குப் பிரிவு வனவா் அஜித்குமாா், வனக்காப்பாளா்கள் திருவேட்டை, ராஜீ, சுதாகா், இமானுவேல், பாரதிகண்ணன், வனக்காவலா் அருண்குமாா், வேட்டை தடுப்பு காவலா்கள் ஆனந்தன், சரவணன், மாரியப்பன், பாலசுப்பிரமணியன் ஆகியோா் அங்கு சென்று
சோதனை நடத்தினா். அப்போது, வீட்டுக்குள் மான்கொம்பு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த வனத் துறையினா், அவரை கைது செய்ததோடு, அவருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனா். பதுக்கி வைக்கப்பட்டிருந்த மான் கொம்பு பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...